சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை (CYCLATHON) மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து சிறுதானியம் குறித்து மிதிவண்டியில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இவ்விழிப்புணர்வு பேரணி அண்ணா நுழைவு வாயில் முதல் காந்தி நகர் மைதானம் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை (CYCLATHON) மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து சிறுதானியம் குறித்து மிதிவண்டி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுதானிய நூற்றாண்டு 2023 முன்னிட்டு, சிறுதானியம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையுடன் Rotary Vegan சங்கம், பசுமை விகடன் மற்றும் காலீஸ்வரி ஆயில் மில் ஆகியோர் இணைந்து சிறுதானிய திருவிழாவானது 26.12.2023 மற்றும் 27.12.2023 அன்று திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் (அமோகா ஹோட்டல் எதிரில்) மாவட்ட ஆட்சியரால் வைக்கப்பட உள்ளது.மேலும், இந்நிகழ்வில், சித்த மருத்துவர் சிவராமன்,. மருதில்லைவாணன், நிறுவனர் மன்னா புட்ஸ், ஐசக் நாசர், மரபு விதை சேமிப்பாளர் ப்ரியா நாராயணன், Indian Biologist & Ecologist சுல்தான் அகமத் இஸ்மாயில், Organic Farming சித்தர், மண்வாசனை மேனகா, MilletMart சத்யராமன், மாறன்ஜீ, அறிவுடை நம்பி, செல்வம் ஆகியோர்களது சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் மதுரை முத்து பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.
சிறுதானிய விதை முதல் மதிப்பு கூட்டு பொருட்கள் வரை கொண்ட நூறு சிறுதானியம் மற்றும் இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் அரங்கம் அமைக்கப்படடுள்ளது கண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.