எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கு.கருணாநிதி தலைமை தாங்கினார். இணை செயலாளர் திரு.கே.வி.அரங்கசாமி அவர்களும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திருமதி. மாலதி அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தார். பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் உடன் கலந்து கொண்டார்
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் சூரியப்பகவானை வணங்குகின்ற வகையில் முதலில், ” பொங்கல் பொங்குதல் ” நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஆடல் ,பாடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று , இறுதியாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாம் ” உறியடித்தலுக்கு” மாணவர்களின் பெற்றோர்களைக் கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இறுதியாக நன்றியுரை பள்ளியின் தமிழாசிரியை, திருமதி. வளர்மதி அவர்களால் வாழ்த்தி,
நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.