2 மணி நேரம் காக்க வைப்பு
புதுச்சேரி திலாசுப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் புகைப்படக்காரர். இவரது மகன் 10 வகுப்பு படித்து வரும் மோனிஷ் (வயது 15). கடந்த 2 நாட்களாக இருமல் சளி, காய்ச்சல் காரணமாக கதிர்காமத்தில் உள்ள அரசு இந்திரா காந்தி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போது மருத்துவர் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என காலை 8.45 மணிக்கு சீட்டு எழுதி கொடுத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய யாரும் வரவில்லை. இது தொடர்பாக மீண்டும் அவர் மருத்துவரை கேட்ட போது அவருக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரமாக கொரோனா பரிசோதனைக்காக மகனுடன் சுரேஷ் காத்திருக்கிறார்.
10-ம் வகுப்பு தேர்வுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆனால் மருத்துவர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக புகைப்படக்கார்ர் சுரேஸ் புகார் தெரிவிக்கிறார்