குடிநீர், சாலை, தூய்மை பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்
பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக்கூட்டமத்தில் குடிநீர், சாலை மற்றும் தூய்மை பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜெ.ஜோதிகுமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர்(பொறுப்பு) கலாதரன் வரவேற்றார். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் மன்ற பார்வைக்கு கொண்டு வந்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் குடிநீர், சாலைப் பணிகள், தூய்மைப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குப்பன் நன்றி கூறினார்.