திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்க பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் குப்பம்மாள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டது.