தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பொங்கலிடப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து வந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் பொங்கல் விழா என்பது சாதி மதங்களை கடந்தது இது உழவர்களுக்கான திருவிழா சமத்துவத்தை போற்றும் வகையில் சமத்துவ பொங்கலாக உலகெங்கும் இத்திருநாள் கொண்டாடப்படுவது தமிழர்களின் பெருமைக்குரியது என்று கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.ஜேக்கப் ஜோஸ், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், மருத்துவமனை தணிக்கையாளர் நந்தகுமார், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.