மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் புகாருக்கு ரமணா பட பாணியில் புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் பட்டியலிட்டு பதில் அளித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் வளர்ந்த இந்தியா என்ற பிரச்சார இயக்கத்தில் நிறைவு நாள் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் 75 நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வு புதுச்சேரி எல்லையான கரையாம்புத்தூர் கிராமத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை ஏற்க குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது
இனிமேல் குவாட்டருக்கு அரசியல், பிரியாணிக்கு அரசியல், பணத்திற்கு அரசியல் என்ற நிலை மாறிவிட்டது. காரணம் மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் போன்றவற்றின் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி உள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் உட்பட பல திட்டங்களில் எத்தனை பேர் பயன்பெற்றுள்ளனர். எவ்வளவு கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று சினிமா வசனம் போல் அமைச்சர் பட்டியலிட்டு பேசினார்.
மத்திய அரசு எதிர் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என திமுக கூறுவது கண்ணை மூடிக் கொண்டு பூவை கேட்பது போல் உள்ளது. கையை திறந்து வைத்தால் பூ கிடைக்கும். அதுபோல மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை கண்ணை திறந்து பார்க்க வேண்டும். எனக் கூறிய அமைச்சர் சாய் சரத்குமார் மீண்டும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு அளித்துள்ள நிதியை சினிமா படப்பாணியில் பட்டியலிட்டு பேசினார்.