தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் சார்பாக மின்சக்தி சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
இதன் நிறைவு நாளான நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியை மண்டல தலைமை பொறியாளர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் முன்னிலை வகித்தார். அண்ணா நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வழியாக செட்டித் தெரு உண்ணாமுலையம்மன் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
பின்னர் நடந்த மின் சிக்கன விழிப்புணர்வு கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர் வெங்கடே சன் வரவேற்றார். இதில் நுகர்வோர்கள், கோட்ட செயற்பொறியாளர்கள், பணியாளர்கள், வர்த்தகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். செயற்பொறியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கோட்ட செயற் பொறியாளர் குமரன் செய்திருந்தார்.