அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:
நிகழாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தொகுப்பு வழங்க உத்தரவு தெரிவிக்கப்படுகிறது.
31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி 2,10,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பட்சத்தில் தோராயமாக ரூ. 238 கோடி செலவினம் ஏற்படும் இதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.