திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.கு. கருணாநிதி தலைமை தாங்கினார். எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் இணை செயலாளர் திரு கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி திரு.ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். உடன் பிஆர்ஓ. சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்.
துறை தலைவர்கள் அனைவரும் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி லக்சி மேரி வரவேற்றார். அனைத்து துறை மாணவ மாணவிகள் கோலமிட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் விவசாயிகளின் பண்பாடு, கலாச்சாரம், உறி அடித்தல், சிலம்பு சுற்றுதல், கயிறு இழுத்தல், நடனம், வண்ண ஓவிய மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் பாஸ்கரன் பேசுகையில் நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் விவசாயத்தின் மதிப்பினை நாம் உணர வேண்டும்.தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்றுவதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும் பொறியியல் மாணவர்களாகிய உங்களின் கடமையாகும் என்று கூறினார்.
விழா ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர் திரு.எஸ் தனசேகர், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவின் நிறைவாக அனைத்து எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு மாணவ மாணவியர்களின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேராசிரியர் திரு வி.கே.தினேஷ் பிரபு நன்றி கூறினார்.