விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், வாக்காளர்களிடையே அச்சத்தை போக்கவும் போலீசார் துணை ராணுவத்தினருடன் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். கோட்டகுப்பம் டி.எஸ்.பி சுனில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணி வகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 90 வீரர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த 60 பேரும், விழுப்புரம் ஆயுதப்படையை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 பேரும், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் 20 பேர் என 200 பேர் இந்த அடையாள அணி வகுப்பில் இடம் பெற்றனர்.