வந்தவாசி, டிச.21-
‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் . மக்கள் கொடுக்கும் மனுக்களை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த விஷயத்தில் அதி காரிகள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என கலெக்டர் பா.முருகேஷ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
வந்தவாசி நகராட்சி, பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமை பகல் ஒரு மணியளவில் கலெக்டர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இத்திட்டத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு பயிற்சி அளித்துள்ளது. அவர்கள் முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் தகுதி உள்ள பயனாளிகளுக்கு தீர்வு காண வேண் டும். தள்ளுபடி செய்யும் மனுக்களை மீண்டும் அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது செய்யாறு சப்கலெக்டர் பல்லவி வர்மா, திட்ட பொறுப்பு அலுவலர் ராம கிருஷ்ணன், தாசில்தார் பொன்னுசாமி, நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன் உள்பட துறை அதி காரிகள் உடன் இருந்தனர்.