வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்,” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
சமீப காலங்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பெறாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
இது தொடர்பாக கான். தலைவர் கார்கே கூறியுள்ளதாவது :-
கட்சி கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் ஓடிப்போனவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தோல்வி ஏற்பட்டால், கட்சி நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவதை பிரதமரால் தடுக்க முடியவில்லை. இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நமது பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதை தடுக்க மோடி தவறி விட்டார்.
கட்சியிடம் போதுமான நிதி வசதி இல்லாத சூழ்நிலையிலும் டெல்லியில் கடுமையாக போராடினோம். கட்சியை முக்கிய எதிர்க்கட்சியாக மாற்ற நிர்வாகிகள் உழைக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.