வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3சதவீதம் முதல் 6.8சதவீதம் வரை இருக்கும் என்று பார்லிமென்டில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நேற்று பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் சமர்ப்பித்தார். பின்னர் லோக்சபாவை இன்று காலை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார்.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது.
வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8சதவீதம் வரை இருக்கும்.
சில்லரை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும்.
வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது.
கிராமப்புறங்களில் நுகர்வு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்து வருகிறது.
சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கமுடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.