வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது.
நாட்டின் திட்டமிடுதலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை செலவினங்கள் பயனுள்ளதாக இருந்ததா? வருவாய் திரட்டும் நடைமுறைகள், அரசு அதன் நிதி நிலையை சீராக பராமரிப்பதில் கவனம் செலுத்தியதா?, கடன் வாங்குவது கட்டுக்குள் இருந்ததா? என்பன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுளளது.
பல்வேறு கணக்கீடுகள் அடிப்படையின்படி :-
ஒடிசா மாநிலம் 67.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது.
சத்தீஸ்கர் 55.2 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்திலும்
கோவா 53.6 மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.
ஜார்க்கண்ட் 51.6 மதிப்பெண்களுடன் 4ஆம் இடத்திலும்
குஜராத் 50.5 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.
மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகியவை 6 முதல் 10 இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு 29.2 மதிப்பெண்களுடன் 11ஆவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான், பீகார், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்கள் 12 முதல் 15 இடங்களில் இருக்கின்றன. மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன. 18 மாநிலங்கள் கொண்ட இப்பட்டியலில் மாநிலங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் 3ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியல்படி மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது தெரியவருகிறது.