மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையே நடந்த கலவரங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் கலவரம் பெரும் வன்முறையாக வெடித்து நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக இழுத்துவரப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.