மணிப்பூரில் ஆயுதக்குழுக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசு தேசவிரோத கும்பல்களை ஒடுக்க தான் இந்த முடிவு எடுத்து இருக்கிறது என்று நமக்கு தெரியும்.
2019-2024 வரை மத்திய உள்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரியும், பஞ்சாபை சேர்ந்தவரும் அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் மிக்க அஜெய் பெல்லா என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன் கவர்னராக மணிப்பூருக்கு அனுப்பிய போதே மத்திய அரசு ஏதோ திட்டமிட்டது தெளிவாக தெரிந்தது.
மாநிலத்தில் பாஜக முதல்வரை ராஜினாமா செய்ய வைத்து கவர்னர் அஜெய் பல்லாவிடம் நிர்வாகத்தை கொடுத்ததும் அவர் செய்த முதல் செயலே தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ தங்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க முதலில் பிப் 28 வரை கெடு விதித்து அதை மார்ச் 6 வரை நீட்டித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் இந்த ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என அறிவித்துள்ள கவர்னர், இதற்கு பிறகு யாராவது ஆயுதங்கள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததை தொடர்ந்து பலர் , நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைத்து வருகிறார்கள். இதன்மூலம் வருகிற காலங்களில் மணிப்பூரில் முழு அமைதி திரும்பும் என்றே தோன்றுகிறது.
இந்த பணி முடிந்ததும், அந்த ஆயுதங்களை வழங்கிய கும்பல், வாங்கி கொடுத்த கும்பல்களுக்கு பல் பிடுங்கும் வேலை நடக்கும் என தெரிகிறது. உத்திரபிரதேச முதல்வர் யோகி பாணியில் யார், யார் மீது புல்டோசர் ஏற்ற வேண்டும் என்ற பட்டியலும் ரெடியாக உள்ளது. எனவே மணிப்பூரில் இனிமேல் பெரும் இனக்கலவரம் நடக்கும் வாய்ப்புகள் இல்லை. இனி எப்போதுமே இனக்கலவரம் நடக்கவே கூடாது என்ற வகையில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க மணிப்பூர் கவர்னருக்கு மத்திய அரசு சில திட்டங்களை வழங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அங்கு பா.ஜ.க., ஆட்சி அமையும் என தெரிகிறது.