டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்’ என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் வழங்கிய அன்பு, ஆசீர்வாதத்திற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். டெல்லியில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டெல்லி மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்காக பணியாற்றிய பா.ஜ.க தொண்டர்கள் அனைவரையும் நான் நினைத்து பெருமைப்படுகிறேன்.
டெல்லியின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.
இந்த மகத்தான வெற்றிக்காக, இரவு பகலாக உழைத்த நமது பா.ஜ.க தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் இன்னும் வலுவாக நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.