ஆரணியில் மாணவ-மாணவிகளின் 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்ற 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட வருவாய் கோட்டாட்சியர், தலைமையில் வட்டாட்சியர், வருவாய் துறையினர்கள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து 14 வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்
இப்பேரணி, ஆரணி டவுன் பகுதி பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து முடிவடைந்தது.
பேரணையின் போது பள்ளி மாணவ, மாணவிகள் வாக்காளர் தின விழிப்புணர்வுகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு வாக்காளர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு வலம் வந்தனர். பொது மக்களிடையே வாக்களிக்கும் உரிமையை குறித்து பெரிதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி அமைந்திருந்தது.