பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம்; மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.