தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை குறித்தும் மேற்கொண்டு ஒன்றிய செயல்கள் ஈடுபட்டு பிடிக்காத குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு பொங்கல் பண்டிகையில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளுமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக நடைபெறும் குற்ற வழக்குகள் ஏற்படாத வண்ணம் ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்.
போதை பொருள் மற்றும் கஞ்சா சம்மதமாக காவல் நிலையங்களில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் பாலசுப்பிரமணியன் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரான செந்தில்குமார் , ஜெகநாதன் ராமச்சந்திரன் , ஜெயக்குமார் செல்வி சிந்து ,ராஜேஸ்வரி மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.