கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24 ஆண்டிற்கான குறியீட்டினை அதிகரித்து மறுநிர்ணயம் செய்து வழங்கப்பட்டது.
சில மத்திய கூட்டுறவு வங்கிகளின் கோரிக்கையை ஏற்று பின்வரும் கடன்களின் உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது.நகை கடன் தற்போது உச்சவரம்பான ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. சம்பள கடன் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், சிறுவணிக கடன் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
ரூ.50 ஆயிரம் வரையிலான தனி நபர் பிணைய கடனுக்கு ஒரு நபர் பிணையம் அளிக்க வேண்டும். ரூ.50,001 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் பிணைய கடனுக்கு 2 பேர் பிணையம் அளிக்க வேண்டும்.இது தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.