தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு
மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தினர் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், சுதாகர் ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
மத்திய அரசு டிரைவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் வகையில் கொண்டு வந்த ஹிட்ரன் சட்ட மசோதா மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சாலை விபத்து டிரைவர்களால் மட்டும் நடைபெறுவதில்லை. பைக் ஓட்டுபவர்கள், பொதுமக்கள் மற்றும் அதிக காரணம் சாலை விழிப்புணர்வு இல்லாதது சரியான சாலை கட்டமைப்பு இல்லாததும் ஆகும். மற்றவர்கள் செய்யும் தவறுக்கு டிரைவர்களை பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றியதை திரும்பப்பெற வேண்டும்.
இந்த சட்டத்தை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெற கோரி விரைவில் உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்த உள்ளோம். மேலும், டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கட்டாயம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும்.
விபத்தின் தன்மையை ஆராய்ந்து யார் மீது தவறு என்று உண்மையான வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.