வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் விவரம் வருமாறு
தலைமை
கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்), ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்), டி.ஆர்.பி.ராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்), கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச்செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச்செயலாளர்), மேயர் பிரியா. மேற்கண்ட தகவலை, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.