கலசப்பாக்கம் அடுத்த குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போளூர் ஒன்றியம், குப்பம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாம்மில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அரங்குகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.