திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில், வருகின்ற ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற கோடை விழா முன்னேற்பாடு பணிகளை, எம்.எல்.ஏ.பெ.சு.தி.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசும் போது வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, சாலை, இருக்கை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும், மேலும் மருத்துவமுகாம், தீயணைப்பு வாகனம் போன்றவை இருத்தல் வேண்டும். மேலும் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு குறித்த அரங்குகள் அமைத்தல் வேண்டும். என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.