ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசினர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, புனிதா அலெக்ஸ், பகுத்தறிவு மாமது, கீதாமோகன், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சிவானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மேலாண்மை குழு உறுப்பினர் எஸ். எஸ்.அன்பழகன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து இல்லம் தேடி மருத்துவ பெட்டகங்களும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், பிரசவித்த தாய்மார்களுக்கான நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கி பேசினார்.
முகாமில் ரத்த அழுத்தம், பொது மருத்துவம், குழந்தை நலம், எலும்பு முறிவு, பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ளிட்ட துறை சார்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு ஆதனூர், விருப்பாச்சிபுரம், மருதேரி, மட்ட தாரி, இரும்பேடு உள்பட கிராமத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆரணி நகரசபை தலைவர் ஏ.சி.மணி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஜெயராணி ரவி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, முள்ளிப்பட்டு எம்.எஸ். ரவி, வேலப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேத கிரி, மொரந்தாங்கள் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அன்பு வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோ நன்றி கூறினார்.