நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
சிலை திறப்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 12 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
இந்தச் சிலையை, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.45 மணி அளவில் திறந்து வைத்தார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.