வரும் மக்களவைத் தேர்தல் விவகாரங்களை கவனிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பான பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தேர்தல் குழுவில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத்தலைவர் கே.செல்வ பெருந்தகை, மூத்த தலைவர் குமரி ஆனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், மணி சங்கர் ஐயர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சு. திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி, தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், எம்.பிக்கள் ஏ. செல்லகுமார், பி. மாணிக்கம் தாகூர், எம்.கே.விஷ்ணுபிரசாத், டாக்டர் கே.ஜெயகுமார், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் எம். ஹாரூண், எஸ். பீட்டர் அல்போன்ஸ், பி. விஸ்வ நாதன், சி.டி. மெய்யப் , கே.ஆர். ராமசாமி, கே. கோபிநாத், நாசே. ராமச்சந்திரன், ராஜேஷ் குமார், கிறிஸ்டோபர் திலக், மயூரா எஸ். ஜெய குமார், மோகன் குமார மங்கலம், பிரவீன் சக்க ரவர்த்தி, ஏ. ஆர்ம்ஸ்ட் ராங் ஃபெர்ணாடோ குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மாநில இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் ஆகிய அணி களின் தலைவர்களும், மாநில சேவா தள தலைமை அமைப்பாளராகப் பதவியில் இருப்பவர்க பவாக ளும் உறுப்பினர்களாக இருப் பார்கள் என்றும் காங்கிரஸ் மேலி டம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கே.எஸ். அழகிரியை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடந்த சில மாதங்களாக அக்கட சியின் மாநிலத் தலைவர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வந் னர். காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தியிடமும் சில எம்.பி.க்கள் நேரில் எழுத்துபூர்வ புகார் கடிதங்களை அளித்தனர்.
புதிய மேலிடப் பொறுப்பாளர் இன்று வருகை
இத்தகைய சூழலில் இருவாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அஜய் குமாரை காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. சென்னைக்கு வெள்ளிக்கிழமை வரும் அவர், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அவரது வருகைக்கு ஒரு நாள் முன்னதாக கட்சியின் தேர்தல் குழுவை அறிவித்துள்ள காங்கிரஸ் மேலிடம், அதற்கு கே.எஸ். அழகிரியையே தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் மாநிலத் தலைமை மாற்றம் தொடர்பான ஊகங்களுக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.