அருணை தமிழ் சங்கம் வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் தலைவர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் .
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , “அருணை தமிழ்ச் சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றியவர்களுக்கு மறைமலையடிகளார் விருதும் , பொது தொண்டாற்றியவர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதும், கலை தொண்டாற்றியவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கே விருதும் ஆன்மிக தொண்டாற்றியவர்களுக்கு கிருபானந்த வாரியார் விருதுகளுடன் பண முடிப்பாக ரூ .25 ஆயிரம் வழங்கி சிறப்பிக்கபடுகின்றன.
விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பவர்கள் அல்லது பரிந்துரை செய்பவர்கள் தங்கள் விவரங்களை மற்றும் ஆதாரங்களோடு வரும் ஜன-5ம் தேதிக்குள் ‘தலைவர், அருணை தமிழ் சங்கம் , 54, திருக்கோயிலூர் சாலை சாரோன், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.