ராணிப்பேட்டை ஆட்சியர் அழைப்பு
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் 2024 ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு பணிகளுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு, பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்கள் www. joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இந்திய ராணுவ ஆள் சேர்ப்புக்கான முகாமில் பங்கு பெற்று ராணுவத்தில் பணி வாய்ப்பு பெற வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.