தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிதமான மழை பெய்தது. இருப்பினும் சனிக்கிழமை காலை குற்றாலம் அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர்வரத்து இருந்தது. ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்தனர்.
மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பழைய குற்றாலம் அருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.