கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடி உள்ள நிலையில், தொடர் மழையின் காரணமாக தென்பென்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3032 கன அடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் 119 அடியில் 108 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர்வளத்துறை சார்பிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.