வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் ரூ. 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள், ஜீனூரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். அருகில் உள்ள ஆத்தக்கால்வாய் அருகே தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும். பி.கே.பெத்தனப்பள்ளி பஞ்சாயத்தில் அரை கிலோ மீட்டர் தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக அசோக்குமார் எம்.எல்.ஏ, வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் பாதுஷா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், முன்னாள் வட்டாரத் தலைவர் முனுசாமி, கிளை செயலாளர்கள் நாகராஜ், சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.