திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு
திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருடியவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் முருங்கம்பாக்கம் சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சண்முகத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்.
சண்முகத்தின் உறவினர்கள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 7 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் உள்ள விக்னேஷ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2000 கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றிய புகாரினபேரில் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு போலீசார் திருடர்களை தீவிரமாக வலை வீசித்தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.