தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு
பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக மக்கள் அனைவரும் 2024-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில், தகுதியான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1,000 வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். மேலும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பானது ஒன்றிய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன்கள் 2024 ஜனவரி 07 முதல் 2024 ஜனவரி 09 வரையிலான நாட்களில் தெரு வாரியாக வீடு தோறும் சென்று நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது. அன்றைய தேதியில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகின்ற 2024 ஜனவரி 10 முதல் 2024 ஜனவரி 13 அன்று வரை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மாலை 6.00 மணி வரை விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தகுதியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுதலின்றி வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக் முறை மூலம் மட்டுமே வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள யார் வந்தாலும் பயோமெட்ரிக் முறை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04175-233063 என்ற எண்ணுக்கோ அல்லது வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பின்வரும் கண்காணிப்பு அலுவலர்களின் திருவண்ணாமலை வட்டம், மந்தாகினி, வருவாய் கோட்ட அலுவலர், திருவண்ணாமலை 9445000420, வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ், திருவண்ணாமலை-9445000194, கீழ்பென்னாத்தூர் வட்டம், தே.சித்ரா, துணைப்பதிவாளர், (மு.கூ.பொ), திருவண்ணாமலை-7598255455, சான்பாஷா, வட்ட வழங்கல் அலுவலர், கீழ்பென்னாத்தூர் -9445796423, போளுர் வட்டம், ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், திருவண்ணாமலை – 9445000193, தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர், போளுர் – 9445000195, ஆரணி வட்டம், தனலட்சுமி, வருவாய் கோட்ட அலுவலர், ஆரணி – 8072912122, வெங்கடேசன், தனிவட்டாட்சியர் (கு.பொ), ஆரணி – 9445000198, கலசபாக்கம் வட்டம், குமரன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருவண்ணாமலை. 9840604670, ஜெகதீசன், தனிவட்டாட்சியர் (கு.பொ), கலசபாக்கம் – 9445796420, தண்டராம்பட்டு வட்டம், ராஜசேகரன், துணைப்பதிவாளர் பணியாளர் அலுவலர், திருவண்ணாமலை – 9443481501, சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர், தண்டராம்பட்டு -9445796404, செங்கம் வட்டம், தீபசித்ரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), திருவண்ணாமலை – 9445461753, ஜெயபாரதி, வட்ட வழங்கல் அலுவலர், செங்கம் – 9445000196, ஜமுனாமரத்தூர்.
செந்தில்குமார், திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம். திருவண்ணாமலை -9444008829, அருள், வட்ட வழங்கல் அலுவலர், ஜமுனாமரத்தூர் – 9499937028, செய்யார் வட்டம் , பல்லவி வர்மா, சார் ஆட்சியர், செய்யார் – 9445000419, சங்கீதா, வட்ட வழங்கல் அலுவலர், செய்யார் – 9445000199, வந்தவாசி வட்டம், சிவா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திருவண்ணாமலை-9445477829, சரவணன், வட்ட வழங்கல் அலுவலர், வந்தவாசி – 9445000197, வெம்பாக்கம் வட்டம், மீனாம்பிகை, மாவட்ட சமூகநல அலுவலர், திருவண்ணாமலை -9150058166, அகத்தீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர், வெம்பாக்கம் -9445796421, சேத்துப்பட்டு வட்டம், சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், திருவண்ணாமலை -7338801277, சுமதி, வட்ட வழங்கல் அலுவலர், சேத்துப்பட்டு – 9445796422; கைபேசி எண்ணிற்கோ அல்லது தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ), வட்ட வழங்கல் அலுவலர்களின் கைப்பேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்டவாறு அதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.