தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு துணைச் செயலர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு துணைச் செயலர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் விவரம்:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் கே.விஜயகார்த்திகேயன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.அனீஷ் சேகர், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, சேலம் பட்டுவளர்ச்சித்துறை இயக்குநர் சந்திரசேகர சகாமுரி, தமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் டி.அன்பழகன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.ஜான் லூயிஸ், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் எஸ்.சிவராசு, வணிக வரிகள் துறை கூடுதல் ஆணையர் பி.உமா மகேஸ்வரி, அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி.ஸ்ரீ வெங்கடபிரியா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலர் ஆர்.சீதாலட்சுமி, போக்குவரத்துத்துறை ஆணையர் ஏ.சண்முக சுந்தரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலர் மகேஸ்வரி ரவிக்குமார், சேலம் ஆட்சியர் எஸ்.கார்மேகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் டி.ரத்னா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போதிருக்கும் பதவிகளிலேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா.