மக்கள் சேவை இயக்கத்தினர் உதவி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் மேற்கு ஒன்றிய வெள்ளிமேடைப்பேட்டை புத்தம்தாங்கள் கிராமத்தைச் சார்ந்த கார்த்திக், வசந்தா இவர்களது குடிசை வீட்டில் நேற்று முன்தினம் மின் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீயில் எரிந்து விட்டது. அதில் வீட்டில் இருந்த பொருட்கள், பாடப் புத்தகங்களும் தீயில் எரிந்து கருகின.
இது பற்றி அறிந்த இ.என்.எஸ் தமிழ்நாடு மக்கள் சேவை இயக்கம் சார்பாக மாநில தலைவர் கீழ் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர் மற்றும் நிர்வாகிகள் வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.