மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக எச்ஐவிஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவிஃஎய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்” “LET COMMUNITIES LEAD” என்ற மைய கருத்தை அடிப்படையாக கொண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு மையமும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து எச்.ஐ.வி இல்லா சமுதாயத்தை உருவாக்கிட பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தற்பொழுது, எச்.ஐ.வி தொற்று கண்டுபிடித்தவுடன் எச்ஐவி தொற்றாளர்கள் அனைவருக்கும் கூட்டு மருந்து சிகிச்சையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் எச்.ஐவி, மற்றும் எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிப்பு செய்யாமை, எய்ட்ஸால் இறப்பு இல்லாமை என்ற இலக்கினை அடைய மாவட்டத்தில் எச்.ஐ.வி. ஃ எய்ட்ஸ் தடுப்பு பணி சிறப்பாக செயல்படுகிறது.
“நம்பிக்கை மையத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் பரிசோதனை செய்தவர்கள் மொத்தம் 114878 நபர்கள் ஆவார்கள். 2023-2024 கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்தவர்கள் மொத்தம் 28870 நபர்கள் ஆவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டு மருந்து சிகிச்சை மையம் (ART) மற்றும் அரசு மருத்துவனைகளில் செயல்படும் இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை (LAC) மையங்களின் மூலம் சுமார் 6998 நபர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்க கூடிய கூட்டு மருந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்தவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையங்களின் மூலம் சுமார் 116 மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை, பால்வினை நோய் குறித்த ஆலோசனைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
எச்ஐவிஃஎய்ட்ஸ் பற்றிய தகவல்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 419 1800 தொடர்பு கொள்ளலாம். மேலும் ஐயம் தவிர் (போன்ற மொபைல் செயலியில் தேவையான அடிப்படை தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக நேற்று நடைபெற்ற எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கல்லூரி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவிகள், அருணை இன்ஜினியரிங் காலேஜ், விஷன் பேரா மெடிக்கல் காலேஜ், அல்மிதினா மேனேஜ்மென்ட் காலேஜ், லயோலா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் எச்ஐவிஃஎய்ட்ஸ் பரிசோதனை வாகனமும் இடம்பெற்றிருந்தது. மேலும் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி, எச்ஐவிஃஎய்ட்ஸ் பற்றிய மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் (சுகாதாரநலப்பணிகள்) மரு. செல்வகுமார், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஹரிகரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட அலுவலர் (பொ) சுப்ரமணியன், மாவட்ட மேற்பார்வையாளர் முருகானந்தம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.