கடந்த 24.09.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒலையனுர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டை வட்டம், R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் துரை அரசன்(52) தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேற்கண்ட குற்றவாளி தொடர்ந்து இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும், குற்றவாளி பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி 24.10.2024-ந் தேதி அன்று கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு சார்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.