போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனையில் இருந்து வழக்கம்போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கின. ஆனால் பேருந்துகளின் ஓட்டம் இருந்ததே தவிர பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
போளூர் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கின ஆனால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவாகவே காணப்பட்டது. தொலைதூரப் பேருந்துகள் முதல் நகர பேருந்துகள் வரை பயணிகளின் வருகை மிகவும் குறைந்த அளவே காணப்பட்டது. இருந்த போதிலும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
மேலும் போளூர் பேருந்து பணிமனை வாயிலில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.தாமோதரன் மண்டல பொருளாளர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என். மனோகரன் பணிமனைத் தலைவர் (அண்ணா தொழிற்சங்கம்), என் .ஆறுமுகம் பணிமனை செயலாளர், என்.தண்டபாணி பணிமனை பொருளாளர், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.தினகரன் தொழில்நுட்ப செயலாளர், கே. தாமோதரன் பணிமனை செயலாளர், எம்.குமரன் பணிமனை பொருளாளர், ஆர்.தங்கதுரை பணிமனை தலைவர், டி.ஜெயசங்கர் பணிமனை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
போளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலி, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.