அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்” என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-
ஜெஎன்1 கொரோனா கண்டறியப்பட்டவர்களுக்கு மிதமான அளவே பாதிப்பு உள்ளது. பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா பாதிப்பு இல்லை. தெற்காசிய நாடுகளில் ஜெ.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. எனவே மக்கள் அச்சபட வேண்டாம்.
இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். 1.25 லட்சம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.