செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூராட்சியில் அமைந்துள்ள கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 333 மாணவிகளுக்கும், ஓஆர்ஜிஎன் அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் 145 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியர்கள் அமுதா, சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி. குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் இரா.ஏ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி திராவிட மாடல் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வரும் திட்டங்களையும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் செங்குன்றம் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் என்எம்டி. இளங்கோ, பி.அன்பு, கவுன்சிலர்கள் கே.கே. ராமன், கா.கு. இலக்கியன், வினோதினி பாலாஜி, திமுக நிர்வாகிகள் கேஎல்என். லெனின்குமார், ஜெ.ரகுகுமார், ஆர்.டி. சுதாகர், வாசு, சுந்தரம், மகேந்திரன், பிரேம்குமார், ரவீந்தர், ஷாம் கார்த்த்திக், கருப்பு ஸ்ரீதர், சாந்தகுமார், அருள் தீபக், தாடி செல்வம், கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.