தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பொன்மலர் பசுபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்மன், கிராம ஊராட்சி அலுவலர். கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகனப்பிரியா பச்சியம்மாள், சுகந்தி, ராஜா, முருகன், ரகுநாத், பெருமாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணயாளர்கள் பொதுமக்கள் பெண்கள் ஏராளமானோர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.