திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் த. பழனி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பக்தன் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கினார். பெருங்கட்டூர் வருவாய் ஆய்வாளர் வ. சேர்மகனி சமத்துவ பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கிராம நிர்வாக அலுவலர் த. பழனி அவர்கள் ஆண்டுதோறும் பெருங்கட்டூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார் நிகழ்வில் கிராம உதவியாளர் சீனுவாசன் நூலக புரவலர் மாரிமுத்து ரேவதி உடன் இருந்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்புற நூலகர் ஜா.தமீம் செய்திருந்தார்.