சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். ஜான் ராஜ்குமார், மதி குமார், கணேசன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாரம்பரிய மருத்துவர்களுக்காக தொடர்ந்து போராடி வரும் டாக்டர் சுப்பையா பாண்டியனுக்கு பாரம்பரிய மருத்துவரின் பாதுகாவலன் என்ற பட்டம் அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்ககோரும் ஆணையை உடனடியாக தமிழக ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சித்த மருத்துவ நல வாரியத்தை பயன்பாட்டிற்கு ஏற்படுத்தும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் மதுரை முருகேசன், சென்னை சங்கர், டாக்டர் பாத்திமா ஜான், டாக்டர் சரவணன் டாக்டர் மணிகண்டன் டாக்டர் சாய்ராம் சென்னை கதிஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.