நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் கூட்டணி என்று நாங்கள் பின்னர் அறிவிப்போம், என்று அம்மா முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தொகுதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் சென்னை சாலையில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் நிறுவன தலைவர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று பேசினார்.
பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் கூட்டணி என்று நாங்கள் பின்னர் அறிவிப்போம்.
முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது அவரை ஆட்சியில் அமர வைத்தவர்களுக்கு துரோகம், நான்கு ஆண்டுகளாக அவரது ஆட்சியை காப்பாற்றியவர்களுக்கு துரோகம், தொண்டர்களுக்கு துரோகம் இப்படி தொடர்ச்சியாக துரோகம் செய்து வந்துள்ளார். இவருக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது.
இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்கான கூட்டணி, இந்தக் கூட்டணியில் உள்ள தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.