திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கம் சார்பாக அகர்வால் கண் மருத்துவமனையினர் பெற்று சென்றனர்.
இந்நிலையில் குடும்பத்தினர் ஒப்புதலோடு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதியவர் உடல் தானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.