பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரது 50 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி பெரியார் நகர் முகாம் அலுவலகத்திலும், அதனை தொடர்ந்து ஈரோடு மணல் மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திலும், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக மாநில நிர்வாகிகள் கந்தசாமி, வீரமணி, மாசு ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், சின்னையன், சுப்பிரமணியம் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், மண்டல குழு தலைவர்கள், பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாகவும் ஈரோடு மாநகரம் சூரம்பட்டி பகுதி கழகம் 31வது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.