போளூர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் தலைமை தாங்கினார். போளூர் ஒன்றிய செயலாளர் பருவதராஜ், ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்புரை அளித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக புதிய நிர்வாகிகளின் அறிமுகம், முகாம் கட்டமைப்பு சீரமைப்பு ஆலோசனை, மகளிர் அணி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் கூட்டத்தில் தீர்மானங்கள் பல்வேறு வாசிக்கப்பட்டன. இறுதியாக ஆரணி நகர துணை செயலாளர் மோகன் நன்றி உரை கூறினார் கூட்டத்தில் ராமு, விக்கி, விஜய், ஜீவானந்தம், அல்லிநகர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.